/

தலையில் விழக்கூடாதா? பல்லி விழும் பலன்கள்!

ஜோதிட ரீதியாகப் பல்லி விழும் பலன்கள் பற்றி..

News image

பல்லி விழும் பலன் - file image

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

ஜோதிடத்தில் ராசி, நட்சத்திரம், திதி, யோகம், கரணம் போன்ற அம்சங்களைப் பஞ்சாங்கத்தில் கணிக்கப்படுவது போன்று, பல்லி விழுவதையும் ஒரு சகுனமாகவும், அதற்கான பலன்களும் கணிக்கப்படுகிறது.

நம் முன்னோர்கள் காகம் தலையில் கொட்டுவது, பல்லி கத்துவது, வாசலில் காகம் கத்துவது என ஒவ்வொன்றுக்கும் ஒரு அறிகுறியை கடவுள் நமக்கு உணர்த்துவதாகச் சொல்லுவார்கள். அதேபோன்று பல்லி நம் மேல் விழுந்தால் அதற்கும் சாஸ்திரத்தில் பலன் உண்டு எனச் சொல்லப்படுகிறது.

ஜோதிட ரீதியாகப் பல்லி சாஸ்திரம் (கௌரி சாஸ்திரம்) முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாம் குடும்பத்தில் நல்ல காரியங்கள் பற்றியோ, முக்கிய விஷயங்களைப் பற்றியோ பேசும்போதும், கடவுளிடம் நம் கோரிக்கையை வைக்கும்போதும் பல்லி சப்தமிட்டால் நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. அத்துடன் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதற்கு இறைவன் ஒப்புதல் அளித்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

நம்முடைய வீட்டை நமக்கே தெரியாமல் ஷேர் செய்து வாழும் ஜீவன்கள் அவை. பெரும்பாலும் சுவரில் இருக்கும். இறை தேடுவதற்காக மட்டும் தரையில் இறங்கிவரும். சர்வ சாதாரணமாக நம்முடன் வாழும் இந்தப் பல்லியைக் குறித்து ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பட்சி சாஸ்திரம், பல்லி விழும் பலன்களைப் பார்க்க ஒருபோதும் தவறுவதில்லை.

பல்லி விழும் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு பலன் சொல்லப்படுகிறது. அதிலும் ஆண், பெண்களுக்கென்று தனித்தனியாகப் பலன் கணிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பொதுப் பலன்கள் மட்டும் தினசரி நாள்காட்டியின் பின்பக்கத்தில் கௌரி சாஸ்திரம் (பல்லி விழும் பலன்கள்) என்று கொடுக்கப்பட்டிருக்கும்.

ஆண்களுக்கு பல்லி விழும் பலன்கள்..

  • தலை - பிரச்னை

  • உச்சம் தலை - மரண பயம் ஏற்படலாம்

  • முகம் - எதிர்பாராத செல்வம் வந்து சேரும்

  • இடது கண் - நல்ல செய்தி

  • வலது கண் - எடுத்த காரியம் தோல்வியடையும்

  • நெற்றி - அன்புக்குரியவர்களிடமிருந்து பிரியும் நிலை ஏற்படும்

  • வலது கன்னம் - மோசமான செய்தியைக் கேட்பீர்கள்

  • இடது காது - பணம் கிடைக்கும் யோகம் உண்டு

  • மேல் உதடு - சண்டை அல்லது வாக்குவாதம் ஏற்படும்

  • கீழ் உதடு - பணவரவு

  • இரு உதடுகளின் மேல் விழுந்தால் - மரணச் செய்தி வரும்

  • வாய் - உடல்நலம் பாதிக்கப்படலாம்

  • இடது பின்புறம் - வெற்றி அல்லது ஆதாயம்

  • கனவில் - அரசு தொடர்பான அச்சம்

  • மணிக்கட்டு - வீட்டை மாற்றியமைக்கலாம் (அ) அழகுப்படுத்தும் பணி நடைபெறும்

  • கை - பண இழப்பு ஏற்படலாம்

  • விரல்கள் - பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு

  • வலது கை - சிக்கல்களைச் சந்திக்கலாம்

  • இடது கை - அவமானம்

  • தொடை - ஆடைகளை இழக்க நேரிடலாம்

  • மீசை - கடினமான காலங்களைக் கடக்கலாம்

  • பாதம் - சவாலான காலகட்டத்தை எதிர்கொள்வீர்கள்

  • பாதத்தின் பின்புறம் - பயணத்திற்குத் தயாராகுங்கள்

  • கால் விரல்கள் - உடல்நலக் குறைவு ஏற்படலாம்

பெண்களுக்குப் பல்லி விழும் பலன்கள்..

  • தலை - மரண பயம்

  • தலைமுடி பின்னல் - நோய் குறித்த குழப்பம் ஏற்படலாம்

  • இடது கண் - கணவர், காதலர் உங்கள் மீது அன்பு செலுத்துவர்

  • வலது கண் - மன அழுத்தம் ஏற்படலாம்

  • வலது கன்னம் - ஆண் குழந்தைப் பிறக்கும்

  • வலது காதின் மேல் பகுதி - பொருளாதார ரீதியான லாபம் கிடைக்கும்

  • மேல் உதடு - வாக்குவாதங்கள் அல்லது சச்சரவுகள் ஏற்படலாம்

  • கீழ் உதடு - புதிய பொருள்கள் கிடைக்கும்

  • இரு உதடுகளிலும் ஒரே நேரத்தில் - வாக்குவாதம் அல்லது சச்சரவு ஏற்படலாம்

  • முதுகுப் பகுதி - மரணச் செய்தி கேட்க நேரிடலாம்

  • நகங்கள் - மோதல் அல்லது சச்சரவு ஏற்படலாம்

  • கைகள் - பொருளாதார ரீதியான ஆதாயம் கிடைக்கும்

  • இடது கை - மன அழுத்தம் ஏற்படலாம்

  • விரல்கள் - புதிய ஆபரணங்கள் கிடைக்கும்

  • வலது கை - மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்

  • தோள்பட்டை - ஆபரணங்கள் கிடைக்கும்

  • தொடை - காதல் சார்ந்த சூழல் அமையும்

  • முழங்கால் - அன்பும் பாசமும் கிடைக்கும்

  • கணுக்கால் - சிக்கல் அல்லது சிரமம் ஏற்படலாம்

  • கால் சதைப்பகுதி (கெண்டைக்கால்) - வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள்

  • வலது கால் - தோல்வி அல்லது பின்னடைவைச் சந்திக்க நேரிடலாம்

  • கால் விரல்கள் - ஆண் குழந்தை தயாராவார்கள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஜோதிட புராணங்களின் படி..

ஸ்ரீஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு இரண்டு மகன்களும் கௌதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். கௌதமருக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்து வந்தனர். ஒருநாள் ஆசிரமத்தில் கௌதமர் பூஜை செய்ய இருவரும் தீர்த்தம் கொண்டு வந்தனர். அந்த தீர்த்தத்தில் தவறுதலாகப் பல்லி இறந்து மிதந்தது. இதனால் கோபமடைந்த கௌதமர், ஸ்ரீ ஸ்ருங்கிபேரர் மகன்கள் இருவரும் பல்லிகளாகக் கடவது என்று சாபமிட்டார்.

தவற்றை உணர்ந்த அவர்கள் சாப விமோசனம் பெற வழி கேட்டனர். அதற்கு கௌதமர் நீங்கள் இருவரும் சத்திய விரத சேத்திரமான காஞ்சிக்குச் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் வரதராஜப் பெருமாளை வழிபட்டால் விமோசனம் பெறலாம். அதோடு மோட்சமும் கிட்டும் என்று கூறினார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை இருவரும் வழிபட்டனர். அவர்களின் பக்தியை மெச்சிய வரதராஜப் பெருமாள் அவர்களுக்குச் சாப விமோசனம் அளித்ததோடு, இருவரின் ஆன்மா வைகுண்டம் செல்லும். அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்ச உலோகங்களாக எனக்குப் பின்புறம் இருக்கட்டும். என்னைத் தரிப்பவர்கள், உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்கப் பெறுவார்கள் என்று அருளினார்.

அதன்படி, இந்த ஆலயத்தில் தங்கம் முலாம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட பல்லி உருவங்கள் பஞ்ச உலோகங்களாக அமைக்கப்பட்டுள்ளது. பக்தக்ரள் அதைத் தொட்டு வணங்கினால் சகல தோஷங்கள் நிவர்த்தியாவதோடு, பல்லி விழுந்த தோஷமும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

On the astrological significance of a lizard falling...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.