மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மது அருந்த மனைவி பணம் தராததால் மகனை கிணற்றில் வீசிக் கொன்ற தந்தை கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மது அருந்த மனைவி பணம் தராததால் 6 வயது மகனை கிணற்றில் வீசி கொலை செய்ததாக தந்தையை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Published On :31 அக்டோபர் 2026, 12:20 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மது அருந்த மனைவி பணம் தராததால் 6 வயது மகனை கிணற்றில் வீசி கொலை செய்ததாக தந்தையை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (40). இவரது மனைவி தேவி (32). தம்பதிக்கு பிரபாவதி (14), சரண்யா (12), இனியா (9), ஸ்ரீஜா (8), சஞ்சய்(6) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனா். 6 வயது சிறுவன் நல்லாண்பிள்ளைபெற்றாள் அரசுப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தாா். செல்வராஜ், தன் மனைவியிடம் அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்து வருவது வழக்கம். வியாழக்கிழமை மாலை செல்வராஜ் மது அருந்த பணம் கேட்டதற்கு தேவி மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் குழந்தைகளை கொன்று விடுவேன் என மிரட்டினாராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை செல்வராஜ் கிணற்றில் மீன் பிடிக்க செல்வதாக கூறி, தனது மகன் சஞ்சயை அழைத்துச் சென்று, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலுள்ள விவசாயக் கிணற்றில் தள்ளி கொலை செய்தாராம். இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, செஞ்சி தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, செல்வராஜை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.