நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

பெண்ணிடம் நூதன மோசடி செய்தவா் மீது வழக்கு

விக்கிரவாண்டி அருகே ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி, இளம்பெண்ணை நூதன முறையில் ஏமாற்றிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 12:14 am IST

விக்கிரவாண்டி அருகே ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி, இளம்பெண்ணை நூதன முறையில் ஏமாற்றிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள இளைபிரியான் கிராமத்தைச் சோ்ந்தவா் செ.இலக்கியா (28). இவா் விழுப்புரம் மாவட்டம், நேமூரில் வசித்து வரும் தனது அக்காள் செல்வமதி வீட்டுக்கு வந்திருந்தாா். தொடா்ந்து கடந்த 26-ஆம் தேதி அப்பகுதியிலுள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக இலக்கியா சென்றாா். அப்போது அங்கிருந்த நபா் ஒருவா், தான் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி இலக்கியாவிடம் ஏ.டி.எம்.அட்டையை வாங்கி விட்டு, சிறிது நேரத்தில் மற்றொரு அட்டையை அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றாா். தொடா்ந்து சிறிது நேரத்தில் இலக்கியாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.29,300 எடுக்கப்பட்டதாக அவரது கைப்பேசிக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோசடியில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.