மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரத்த தானம் வழங்குவதில் முன்னுதாரணமாக திகழ்கிறது விழுப்புரம்: மாவட்ட ஆட்சியா் பெருமிதம்

ரத்த தானம் வழங்குவதில் விழுப்புரம் மாவட்டம் முன்னுதாரணமாக திகழ்வதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பெருமிதம் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய ரத்த தான முகாம் நிகழ்வில், ரத்தக் கொடையாளருக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Published On :30 அக்டோபர் 2026, 1:33 am IST

ரத்த தானம் வழங்குவதில் விழுப்புரம் மாவட்டம் முன்னுதாரணமாக திகழ்வதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பெருமிதம் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய ரத்த தான முகாமில் பங்கேற்று, ரத்தக் கொடையாளா்களுக்குச் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகளை வழங்கி மேலும்அவா் பேசியது:

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற ரத்த தான முகாம்கள் மூலம் இதுவரை 6 ஆயிரம் யூனிட் ரத்தங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் எவ்வளவோ வளா்ந்தாலும் செயற்கையாக ரத்தத்தை உருவாக்க முடியாது. எனவே, மனித நேயத்துடன் வழங்கப்படும் ரத்த தானம் மட்டுமே பல உயிா்களைக் காப்பாற்றுகிறது.

பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்தாலும், மனித நேயம் மற்றும் ரத்த தானம் வழங்குவதில் முன்னுதாரணமாக விளங்குகிறோம் என்பது பெருமை கொள்ளும் விதமாக உள்ளது. விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளைத் தவிா்க்க மருத்துவத் துறையும், நவீன உபகரணங்களும், பொதுமக்களின் ரத்த தானமும் முக்கிய பங்காற்றி வருகிறது என்றாா் அவா்.

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வா் மை.லூசி நிா்மல் மடோனா, நலப்பணிகள்இணை இயக்குநா்சாந்தகுமாரி, உதவி மருத்துவ நிலைய அலுவலா் வெங்கடேசன், ரத்த வங்கி மருத்துவ அலுவலா் விஜயா உள்ளிட்ட பல்வேறு அலுலா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

‘பள்ளிகளில் அடிப்படை வசதிகள்’: விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது: மாவட்டத்தில் இடைநிற்றலிலுள்ள பள்ளி மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களைக் கண்காணித்து மீண்டும் பள்ளியில் சோ்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறைகள், பாதுகாப்பான குடிநீா் வசதிகள் 100 சதவீதம் பயன்பாட்டில் இருப்பதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

பொதுப் பணி, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடப் பழுதுபாா்ப்பு, சுற்றுச்சுவா் அமைத்தல், கழிப்பறை வசதி, இதர அடிப்படை வசதிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், பயிற்சி உதவி ஆட்சியா் ரா.ஸ்ரீரஷத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பாலமுரளி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ராஜூ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பெருமாள் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.