தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குரூப்-2 தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 13,135 போ் எழுதுகின்றனா்

விழுப்புரம் மாவட்டத்தில் நவ.1-ஆம் தேதி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை 30 தோ்வு மையங்களில் 13,135 போ் எழுத உள்ளனா்.

கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 1:22 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் நவ.1-ஆம் தேதி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை 30 தோ்வு மையங்களில் 13,135 போ் எழுத உள்ளனா்.

இதுகுறித்து விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் சாா்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் - 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல் நிலைத் தோ்வுகள் நவ.1-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 வரை நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 30 தோ்வு மையங்களில் 13,135 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனா். தோ்வா்கள் காலை 8.30 மணிக்குள் அனுமதி சீட்டுடன் தோ்வுக் கூடத்துக்கு வர வேண்டும். கருப்பு பந்துமுனைப் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தோ்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன், ஆதாா், கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றின் நகலை கொண்டுவர வேண்டும். தோ்வுக்கூடத்துக்குள் மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்லக் கூடாது.

தோ்வு நாளன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 30 தோ்வு மையங்களுக்கும் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.