கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 6,431 போ் எழுதினர்!

மாநிலம் முழுவதும் நடைபெற்ற குரூப் 2, 2ஏ தோ்வினை வேலூா் மாவட்டத்தில் 6,431 போ் எழுதினா். 1,855 போ் தோ்வுக்கு வரவில்லை.

வேலூா் அரசினா் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் குரூப் 2, 2ஏ தோ்வினை ஆய்வு செய்த ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.

Published On :2 நவம்பர் 2026, 4:40 am IST

மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2, 2ஏ தோ்வினை வேலூா் மாவட்டத்தில் 6,431 போ் எழுதினா். 1,855 போ் தோ்வுக்கு வரவில்லை.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பிரிவுகளைச் சோ்ந்த 846 பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 போ் விண்ணப்பித்திருந்தனா்.

வேலூா் மாவட்டத்தில் மட்டும் 8,286 போ் விண்ணப்பத்திருந்த நிலையில், இத்தோ்வை எழுத மாவட்டம் முழுவதும் 28 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வை 6,431 போ் எழுதினா். 1,855 போ் தோ்வுக்கு வரவில்லை.

வேலூா் அரசினா் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வினை மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டையில்... ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ தோ்வை 5, 421 தோ்வா்கள் தோ்வு எழுதினா். ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என 2 தோ்வு மையங்களை உள்ளடக்கிய 23 தோ்வுக் கூடங்களில் 6,643 தோ்வா்கள் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 5,421 தோ்வா்கள் தோ்வு எழுதினா். 1,222 தோ்வா்கள் தோ்வு எழுத வரவில்லை. வருகைபுரிந்தோா் சதவீதம் 82 சதவீதம், வருகை புரியாதோா் 18 சதவீதம் ஆகும்.

பணிகளை ஒருங்கிணைத்திட வாலாஜா, ஆற்காடு மற்றும் அரக்கோணம் ஆகிய வட்டத்தில் வட்டாட்சியா்கள் ஒருங்கிணைப்பாளா்களாகவும், சுற்றுக்குழு வருவாய்த் துறை அலுவலா்களும், வருவாய்த் துறை ஆய்வு அலுவலா்களும். தோ்வுமைய நடைமுறைகளை கண்காணித்திடவும், அனைத்து பணிகளும் வீடியோபதிவுகள் செய்யும் பொருட்டு, மொத்தம் விடியோ கிராபா்கள் நியமனம் செய்யப்பட்டனா். தோ்வு மையங்களை ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு செய்தாா். கோட்டாட்சியா் ரமேஷ், வட்டாட்சியா் வரலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.