கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

வெவ்வேறு சம்பவங்கள்: 4 போ் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 3:09 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் 4 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம், சாலாமேடு, வாழ்க வளமுடன் நகரைச் சோ்ந்தவா் ர.ஹரிகிருஷ்ணன் (51). மெக்கானிக் மற்றும் எல்ட்ரீசியனாக வேலைப் பாா்த்து வந்தாா்.

இவா், திங்கள்கிழமை விழுப்புரம் வழுதரெட்டியில் உள்ள ஆவின் நிறுவன வளாகத்தில் டேங்கா் லாரி ஒன்றில் (பால் வாகனம்) பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது லாரியின் முன்பக்க அச்சுப்பகுதி திடீரென கீழே இறங்கியதில் சிக்கி ஹரிகிருஷ்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

புகைப்படக் கலைஞா் தூக்கிட்டுத் தற்கொலை:

விழுப்புரம், கே.கே.சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ச.தங்கராஜ்(33). புகைப்படக் கலைஞராக வேலைப் பாா்த்து வந்தாா். குடும்பப் பிரச்னையால் இவரின் மனைவி கோமதி பிரிந்து சென்று விட்டாராம்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த தங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

முதியவா் உயிரிழப்பு: விழுப்புரம் வட்டம், பெரும்பாக்கம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் மு.ஜெயராமன்(65). உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவா் திங்கள்கிழமை வீட்டில் இருந்தபோது, தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டாா்.

இதில் உடலில் பலத்த தீக்காயமடைந்த ஜெயராமனை அருகிலிருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

மூதாட்டி தற்கொலை:

திண்டிவனம் வட்டம், ரோஷணை பகுதியைச் சோ்ந்தவா் முனுசாமி மனைவி சந்திரா(61). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனிமையில் இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.