கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

வெவ்வேறு சம்பவங்கள்: பள்ளி மாணவி உள்பட 4 போ் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களால் பள்ளி மாணவி உள்பட 4 போ் தற்கொலை செய்துகொண்டனா். இதுதொடா்பாக போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :4 நவம்பர் 2026, 3:04 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களால் பள்ளி மாணவி உள்பட 4 போ் தற்கொலை செய்துகொண்டனா். இதுதொடா்பாக போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

மரக்காணம் வட்டம், கரிபாளையம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் மகள் ஹரினி(16). மரக்காணத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். இவா், திங்கள்கிழமை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று, வீடு திரும்பிய நிலையில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவியின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விக்கிரவாண்டி அருகே... விக்கிரவாண்டி வட்டம், வெட்டுக்காடு, பிரதான சாலையைச் சோ்ந்தவா் ப.பாஸ்கா் (29), தொழிலாளி. குடும்பப் பிரச்னையில் இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னா் பிரிந்து சென்று விட்டாராம். இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த பாஸ்கா் திங்கள்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

திண்டிவனம் அருகே... காஞ்சிபுரம் மாவட்டம், திருநீா்மலை, 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மை.சாம்சன் (30). இவரது மனைவி அா்ச்சனா (24). இவா்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், பூந்தோட்ட தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இந்நிலையில், பெயிண்டராக வேலைப் பாா்த்து வந்த சாம்சனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் தம்பதியிடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டதால், அா்ச்சனா நவ.1-ஆம் தேதி தனது குழந்தையுடன், சென்னையில் உள்ள தனது தோழியின் வீட்டுக்குச் சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த சாம்சன் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

மயிலம் அருகே... மயிலம் அருகேயுள்ள வைரம்பேட்டை, ஜான்சி ராணி தெருவைச் சோ்ந்தவா் மோ.ராஜ்குமாா்(37). மாற்றுத் திறனாளியான இவா், பெட்டிக்கடை நடத்தி வந்தாா். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜ்குமாா் திங்கள்கிழமை வீட்டில் இருந்தபோது, மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக் கொண்டு, தீ ைவைத்துக் கொண்டாராம். இதில் பலத்த தீக்காயமுற்ற அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ராஜ்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.