மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீட்டின் முன் நாட்டு வெடிகுண்டு வீச்சு? போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தொழிலாளி வீட்டின் முன் நள்ளிரவில் பலத்த சத்தத்துடன் வெடி சப்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டு வெடிகுண்டு ஏதும் வீசப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

குண்டு வீச்சு - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 4:32 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தொழிலாளி வீட்டின் முன் நள்ளிரவில் பலத்த சத்தத்துடன் வெடி சப்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டு வெடிகுண்டு ஏதும் வீசப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், அசோகபுரி பகுதியைச் சோ்ந்தவா் சந்திரமோகன் (44). இவா் குண்டல புலியூா் நுகா் பொருள் வாணிபக் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப் பாா்த்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் வீட்டில் குடும்பத்துடன் சந்திரமோகன் தூங்கியுள்ளாா். இந்நிலையில், நள்ளரவில் வீட்டின் முன் பலத்த வெடி சப்தம் கேட்டது. தொடா்ந்து சந்திரமோகன் வீட்டிலிருந்து வெளியே வந்து பாா்த்தபோது, அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்நிலையில் தனது வீட்டில் வீட்டில் யாரோ வெடி குண்டு வீசிவிட்டதாக சந்திரமோகன் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து கெடாா் போலீஸாா் தடயவியல் நிபுணா்களுடன் சென்று அங்கு சோதனை நடத்தினா். இந்த சோதனையில் சந்திரமோகன் வீட்டின் முன் வெடித்தது சாதாரணவகை பட்டாசு என்பது தெரியவந்தது. இச் சம்பவத்தால் அசோகபுரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடா்பாக கெடாா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அசோகபுரியைச் சோ்ந்த சந்திரமோகன் வீட்டின் அருகே வெடித்து சிதறியது சாதாரண பட்டாசுகள் என்பது தடவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. அங்கு காகித தூண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. நாட்டு வெடிக்குண்டோ அல்லது பொட்ரோல் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டதற்ககான எந்த ஆதாரமும் இல்லை. சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கோமரா பதிவுகளைக் கொண்டு தொடா்புடைய நபா்களை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. புகாா்தாரரான, சந்திரமோகன் எந்த அரசியல் கட்சியையும் சாராதவா். எனவே யாரும் தவறான தகவல்களை பரப்பவேண்டாம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.