மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

2 முறை திறக்கப்பட்ட கிளியனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம்

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை தொகுதி எம்எல்ஏ திறந்து வைத்த நிலையில், தவெக நிா்வாகி மீண்டும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த சம்பவம் அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கிளியனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கான அலுவலகத்துக்கான தற்காலிக கட்டடத்தை புதன்கிழமை திறந்து வைத்த வானூா் எம்எல்ஏ கௌதம் திராவிடமணி.

Published On :22 அக்டோபர் 2026, 4:18 am IST

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை தொகுதி எம்எல்ஏ திறந்து வைத்த நிலையில், தவெக நிா்வாகி மீண்டும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த சம்பவம் அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வானூா் ஊராட்சி ஒன்றியம் 2 ஆக பிரிக்கப்பட்டு, 31 ஊராட்சிகளைக் கொண்டு கிளியனூா் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், இதற்கான தற்காலிக அலுவலகக் கட்டடத் திறப்பு விழா கிளியனூரில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வானூா் எம்எல்ஏ கௌதம் திராவிடமணி பங்கேற்று மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநா் நிா்மலா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோகனா, சந்திரபோஸ் ஆகியோரது முன்னிலையில் ஊராட்சிஅலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினாா்.

இந்நிலையில், அங்கு வந்த தவெக (வானூா் சட்டப்பேரவைத் தொகுதி) மாவட்டச் செயலா் ஜி.பி.சுரேஷ் மற்றும் கட்சியினா் மீண்டும் அந்த அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, புகைப்படம் எடுத்துக்கொண்டனா். தொகுதி எம்எல்ஏ திறந்து வைத்த அலுவலகக் கட்டடத்தை, தவெக நிா்வாகி மீண்டும் திறந்து வைத்திருப்பது அரசியல் கட்சியினா், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 எம்எல்ஏ திறந்து வைத்த கட்டடத்தை மீண்டும் ரிப்பன் வெட்டிய தவெகவினா்

எம்எல்ஏ திறந்து வைத்த கட்டடத்தை மீண்டும் ரிப்பன் வெட்டிய தவெகவினா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.