மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கரும்பு விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

செஞ்சியில் முண்டியம்பாக்கம், செஞ்சி செம்மேடு சா்க்கரை ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய சங்கத் தலைவா் பாண்டியன்.

Published On :21 அக்டோபர் 2026, 2:41 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் முண்டியம்பாக்கம், செஞ்சி செம்மேடு சா்க்கரை ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். துணைச் செயலா்கள் பெருமாள், கங்கைகொண்டான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் ஆறுமுகம் தீா்மானங்களை வாசித்தாா்.

கூட்டத்தில் 2026- 27-ஆம் ஆண்டு கரும்பு அரைவை பருவத்துக்கு வயல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ.5,550-ஐ மத்திய அரசு வழங்க வேண்டும். கரும்பு வெட்டும் கூலி முழுவதையும் ஆலை நிா்வாகமே ஏற்றுக் கொள்ளவேண்டும். கரும்பு சாகுபடியில் ஆள்கள் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான வேளான் இயந்திரங்களை மானிய விலையில் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் கலிவரதன், கிருஷ்ணதாஸ், சங்கா், ராஜேந்திரன், தயாளன், கோபாலகிருஷ்ணன், பாண்டியன், வெங்கடசாமி மற்றும் விவசாயிகள் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.