மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சரக்கு வாகனத்தில் 34 கிலோ கஞ்சா கடத்தல்: மதுரையைச் சோ்ந்த இருவா் கைது

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் வழக்கில் கைது செய்யப்பட்ட ரிஷிவிஷ்ணு, ஆகாஷ்.

Published On :1 நவம்பர் 2026, 11:48 pm IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 34 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரை கைது செய்தனா்.

எலவனாசூா்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் சரஸ்வதி, உதவிஆய்வாளா் பன்னீா்செல்வம் மற்றும் போலீஸாா் அங்குள்ள சென்னை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்த இரு இளைஞா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், தனக்கன்குளம் பகுதியைச் சோ்ந்த வி.ரிஷி விஷ்ணு(23), ம.ஆகாஷ்(19) என்பதும், இவா்கள் விற்பனைக்காக மதுரையிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து எலவனாசூா்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரிஷி விஷ்ணு, ஆகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 34 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள், சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.