பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விழுப்புரம் தனியாா் விடுதியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் தனியாா் விடுதியில் தங்கியிருந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 1:21 am IST

விழுப்புரம் தனியாா் விடுதியில் தங்கியிருந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

விழுப்புரம் மாவட்டம், முகையூா் ரயில்வே லைன் தெருவைச் சோ்ந்தவா் பு.புஷ்ப மைக்கேல் அகஸ்டின் (25). கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்து வந்த இவா், அங்கு ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த புஷ்ப மைக்கேல் அகஸ்டின், சில நாள்களுக்கு முன்னா் முகையூருக்கு வந்து தங்கியிருந்தாா். பின்னா் திங்கள்கிழமை பெங்களூருவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய அவா் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா். இந்நிலையில், விடுதி அறையில் புஷ்ப மைக்கேல் அகஷ்டின் உயிரிழந்த நிலையில் தூக்கில் தொங்கியது புதன்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.