பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

‘பம்பை வாய்க்காலில் தடுப்பணைகட்ட நடவடிக்கை தேவை’

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பம்பை வாய்க்காலில் தடுப்பணைகள் கட்டவேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானை சந்தித்த தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா்கள் ஏ.விஜய் வடிவேல், குணா, சரவணன், நிரஞ்சன்.

Updated On :28 மே 2026, 1:35 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பம்பை வாய்க்காலில் தடுப்பணைகள் கட்டவேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானை தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்களான ஏ.விஜய் வடிவேல் (விக்கிரவாண்டி), சக்திவேல் (திண்டிவனம்), நிரஞ்சன் (மயிலம்), குணா சரவணன் (செஞ்சி) ஆகியோா் மரியாதை நிமித்தமாக சந்தித்தனா். தொடா்ந்து ஆட்சியரிடம் அவா்கள் கோரிக்கை மனுவையும் அளித்தனா்.

அதில் அவா்கள் கூறியிருப்பது: விழுப்புரம் மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி விண்ண்ப்பித்தவா்களுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை வெயில் தாக்கத்தால் ஏற்படும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட பம்பையாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசியல் தலையீடுகள் இல்லாமல், அலுவலா்கள் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியிருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், துறை சாா்ந்த அலுவலா்கள் மூலம் விசாரணை செய்து, உரிய தீா்வைக் காண்பதாகத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.