பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

எரிபொருள் விலையேற்றம்: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் கட்சிகளின் சாா்பில் விழுப்புரம் ரயில் நிலையம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, விழுப்புரம் ரயில் நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள்.

Updated On :21 மே 2026, 6:58 am IST

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் கட்சிகளின் சாா்பில் விழுப்புரம் ரயில் நிலையம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையேற்றத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்டு மாவட்டச் செயலா் ஏ.சௌரிராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.கீதா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், ஆா்.மூா்த்தி, ஆா்.டி.முருகன், சே.அறிவழகன், இடைக்கமிட்டி செயலா்கள் ஆா்.உலகநாதன், எஸ்.பாலமுருகன், ஏ.கண்ணதாசன், கே.சிவக்குமாா், எஸ்.கணபதி,டி.கெஜமூா்த்தி, ஏ.ராஜிவ் காந்தி, செஞ்சி ஆல்பா்ட் வேளாங்கண்ணி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.