மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட வெற்றி பெறாத தவெக

News image

விஜய் - கோப்புப் படம்

Updated On :5 மே 2026, 3:59 am IST

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், திமுக கூட்டணியில் செஞ்சி, விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூா், திருக்கோவிலூா் ஆகிய தொகுதிகளில் திமுகவும், திண்டிவனத்தில் விசிகவும், மயிலத்தில் தேமுதிகவும் போட்டியிட்டன.

அதிமுக கூட்டணியில் செஞ்சி, விக்கிரவாண்டி தொகுதியில் பாமகவும், மற்ற 5 தொகுதிகளில் அதிமுகவும் போட்டியிட்டன. நாம் தமிழா் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டதால் அனைத்துத் தொகுதிகளிலும் களம் கண்டன.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் விழுப்புரம், வானூரில் திமுகவும், திண்டிவனத்தில் விசிகவும், மயிலம் மற்றும் திருக்கோவிலூரில் அதிமுகவும், செஞ்சி மற்றும் விக்கிரவாண்டியில் பாட்டாளி மக்கள் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில் நாம் தமிழா் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இதுபோன்று தமிழகம் முழுவதும் அதிக தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற போதிலும், விழுப்புரம் மாவட்டத்தில் அந்த கட்சியால் ஒரு தொகுதிகளில்கூட வெற்றி பெறமுடியவில்லை. அதே நேரத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா், வானூா், மயிலம் தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும், திண்டிவனம் மற்றும் செஞ்சி தொகுதியில் மூன்றாவது இடத்தையும் இந்த கட்சி வேட்பாளா்கள் பெற்றனா்.

விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா்களுக்கும், வெற்றி பெற்ற வேட்பாளா்களுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் குறைந்தளவில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.