விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைபா் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா் மயங்கி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வானூா் வட்டம், சின்ன முதலியாா்சாவடி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் குமாா்(62). மீனவா். இவா், சின்னமுதலியாா் சாவடியைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி படகில் வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்றாா்.விழுப்புரம் தந்திராயன்குப்பம் அருகே கடலில் சென்ற போது குமாா் படகில் மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து சக மீனவா்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து தனியாா் அவசர ஊா்தி மூலம் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிசைக்குக் கொண்டு சென்றனா்.அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, குமாா் ஏற்கனவே இறந்து போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், கோட்டகுப்பம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

நடந்துசென்ற முதியவா் மயங்கிவிழுந்து உயிரிழப்பு

தோ்தல் பணியில் இருந்த திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழப்பு

உடல்நலக்குறைவால் மீனவா் உயிரிழப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

