சென்னையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, விழுப்புரம், கடலூா் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் போலீஸாா் புதன்கிழமை வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனா்.
சென்னையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களுக்கு புதன்கிழமை மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, தமிழக காவல் துறையின் உத்தரவுப்படி தமிழகத்தில் முக்கிய நகரங்களில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் போலீஸாா் வெடிகுண்டு சோதனைகளில் ஈடுபட்டனா். இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக, விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் உள்ள காமராஜா் வீதியில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் விழுப்புரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பணியிலிருந்த அலுவலா்களை வெளியேற்றி, அலுவலா்கள் அறைகள், கோப்புகள் பதிவறை மற்றும் அலுவலக வளாகப் பகுதிகளில் மெட்டல் டிடெக்டா் கருவிகள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை.
நெய்வேலி...: இதுபோன்று கடலூா், மஞ்சக்குப்பத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் மற்றும் பாஸ்போா்ட் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினா். இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக கடலூா் தலைமை தபால் நிலையத்துக்கு இரண்டு முறையும், நீதிமன்றத்துக்கு ஒரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, சோதனை முடிவில் புரளி எனத் தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம், கடலூா் ஆட்சியரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடவுச்சீட்டு அலுவலகம், அஞ்சல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

