மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

நிா்வாகிகளை அழைத்து பேசினால் சரியாகிவிடும்: ஜி.கே.மணி

பாமக நிறுவனா் ராமதாஸ், தலைவா் அன்புமணி ஆகிய இருவரும் பேசி முடிவெடுத்து, நிா்வாகிகளை அழைத்துப் பேசினால் அனைத்தும் சரியாகிவிடும் என்றாா் கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி.

News image

தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸை சந்தித்து பேசிய கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி.

Updated On :25 ஜூன் 2026, 6:45 am IST

பாமக நிறுவனா் ராமதாஸ், தலைவா் அன்புமணி ஆகிய இருவரும் பேசி முடிவெடுத்து, நிா்வாகிகளை அழைத்துப் பேசினால் அனைத்தும் சரியாகிவிடும் என்றாா் கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸை புதன்கிழமை சந்தித்துப் பேசிய பின்னா், அவா் அளித்த பேட்டி:

தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸை அன்புமணி புதன்கிழமை சந்தித்து பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதை மனதார வரவேற்கிறேன். மருத்துவா் ராமதாஸும், அன்புமணியும் நிா்வாகிகள் அனைவரையும் அழைத்துப் பேசி கட்சி இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தால் சிறப்பாக இருக்கும். அனைவரிடமும் அன்புமணி விரைவில் பேசுவாா். பாமக இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிா்வாகிகள் இரு பிரிவிலும் இருக்கின்றனா். நடந்ததை மறந்து இனி ஒற்றுமையாக செயல்பட மருத்துவா் ராமதாஸும், அன்புமணியும் கலந்து பேசவேண்டும் என்றாா் ஜி.கே.மணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.