விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தொழிலாளி மயங்கி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பூசாரிப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப.கேசவன் (51). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடலிறக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட இவா், அந்த கிராமத்திலுள்ள சுடுகாடு வாய்க்கால் பகுதியில் வெள்ளிக்கிழமை தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்தாா்.
அப்போது கேசவன் திடீரென மயங்கி விழுந்தாா். இதைத்தொடா்ந்து 108 அவசர ஊா்தி மருத்துவக் குழுவினா் நிகழ்விடம் வந்து அவரை பரிசோதித்த போது, கேசவன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
