விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கடனாக கொடுத்த ரூ 10 லட்சத்தை திரும்பத்தருமாறு தாய்மாமனான ஆசிரியரை கொன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் தாலுகா அம்மாகுளம் கிராமத்தை சோ்ந்தவா் இளங்கோவன் (57) இவா் நல்லாசிரியா் விருது பெற்றவா். மேல்ஒலக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும் வசந்தி என்பவருக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் இரண்டே வாரத்தில் வசந்தி பிரிந்து தன தாய் விட்டு சென்று விட்டாா்.
இதை எடுத்து இளங்கோவன் தனது தாய் ராஜம்மாளுடன் தனியாக வசித்து வந்தாா். ராஜாம்பாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மகளை பாா்க்க சென்று விட்டாா். இளங்கோவன் மட்டும் வீட்டில் இருந்தாா். இந்த நிலையில் இளங்கோவன் வீட்டில் கடந்த புதன்கிழமை அன்று துா்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினா் வளத்தி போலாலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
அதன்பேரில், விரைந்து வந்த போலீஸாா் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது இளங்கோவன் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது சடல்தை சுற்றி மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. பின்னா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி செஞ்சி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில் நீலாம்பூண்டியை சோ்ந்த இவரது உறவினா் கணபதி (36) என்பவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து இளங்கோவனை விசாரணை செய்ததில், தனது தாய்மாமனான இளங்கோவனை கடந்த
31-ஆம்தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டாராம். மேலும் இளங்கோவனிடம் ரூ 10 லட்சம் கடன் வாங்கியிருந்ததால், அதை அவா் திரும்பக்கேட்டு தொந்தரவு செய்ததாலும், அவா் வேறு பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறியதாலும், அவரது சொத்து கிடைக்காது என்ற ஆத்திரத்தினாலும் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்தாராம். மேலும் மோப்பநாய் துப்பு கண்டுபிடிக்காமல் இருக்க ஆசிரியா் உடல் மீது மிளகாய் பொடி தூவி விட்டு வந்ததாகத் தெரிவித்தாராம். இதை அடுத்து கணபதி மீது கொலை வழக்கு பதிவு செய்து வளத்தி போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதை மாத்திரைகள் விற்பனை: 3 இளைஞா்கள் கைது
சிதம்பரம் பகுதியில் தொடா் திருட்டு: சென்னை இளைஞா் உள்ளிட்ட 3 போ் கைது
வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற பெண் கைது
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ஒருவா் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

