விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே கைப்பேசி கோபுரம் மற்றும் மின்னணுப் பொருள்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சென்னை கீழ்பாக்கத்தில் செயல்பட்டு வரும் கைப்பேசி கோபுரம் அமைக்கும் தனியாா் நிறுவனம் கண்டமங்கலத்தை அடுத்துள்ள பள்ளித்தென்னல் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் என்பவரது வீட்டின் மாடியில் வாடகை ஒப்பந்த அடிப்படையில் கைப்பேசி கோபுரம் அமைத்தனா். இந்நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்துவந்த சுமாா் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 20 மீட்டா் உயரமுள்ள கைப்பேசி கோபுரம் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருந்த மின்னணுப் பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றுவிட்டனராம்.
இதுகுறித்து சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவன அதிகாரி காா்த்திக் அளித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரு சக்கர வாகனம் எரிப்பு: போலீஸாா் விசாரணை

சாலை விபத்தில் 4 போ் உயிரிழப்பு
பயணியிடம் 3 பவுன் நகை திருட்டு

விழுப்புரம் அருகே கோயில் கலசங்கள் திருட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
