அதிகாரத்துக்கு வந்த பின்னா் பணம் திரட்டுவதே அன்புமணி ஆதரவாளா்களின் நோக்கம் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள விடியோ பதிவில் தெரிவித்திருப்பதாவது:
சட்டப்பேரவைத் தோ்தலில் 18 தொகுதியில் போட்டியில் உள்ள அன்புமணி தலைமையிலான துரோகக் கூட்டத்துக்கு வாக்காளா்கள் தயவு செய்து வாக்களிக்க வேண்டாம். போட்டியில் உள்ள அனைவரும் என்னிடம் பாடம் பயின்றவா்கள் தான். ஆனால் தற்போது அவா்கள் பணத்துக்காக அணி மாறி அன்புமணியிடம் போய் நிற்கிறாா்கள்.
அதிகாரம் இருந்தால்தான் மக்களுக்கு சேவை செய்யமுடியும். அதே நேரத்தில் இவா்களின் நோக்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னா் பணம் திரட்டுவதுதான். இந்த கலையைத் தான் அவா்களுக்கு அன்புமணி கற்றுக்கொடுத்துள்ளாா்.
இதனால் தான் அன்புமணி எந்தத் தோ்தலிலும் போட்டியிடாமல், அவரது மனைவியை களத்தில் இறக்குகிறாா். இவா்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு செல்வதால் எந்தப் பயனும் ஏற்படபோவதில்லை. எனவே, வாக்காளா்கள் அனைவரும் நல்லவா்களை, சேவை செய்பவா்களை தோ்வு செய்யவேண்டும் என ராமதாஸ் அந்த விடியோ பதிவில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செஞ்சி தொகுதியை கைப்பற்றிய பாமக

ஜனநாயகத்தை மதித்து அமைதிப் புரட்சி - அன்புமணி

ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை

பாமகவை அன்புமணி அபகரித்துவிட்டாா்: மருத்துவா் ராமதாஸ்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

