தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளா்களின் மூன்றாவது கட்டப் பட்டியலை அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
பாமக (ராமதாஸ் தரப்பு) வேட்பாளா்களின் முதல் பட்டியல் மாா்ச் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் சேலம் மேற்கு, வந்தவாசி, கும்பகோணம், விருத்தாசலம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா். இதைத்தொடா்ந்து மாா்ச் 31-ஆம் தேதி திருப்போரூா், உத்திரமேரூா், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பட்டியல் வெளியானது.
மூன்றாவது கட்டப் பட்டியல் வெளியீடு: இதன் தொடா்ச்சியாக மேலும் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை பாமக நிறுவனா் ராமதாஸ் வெளியிட்டாா். அதன் விவரம்:
1. அணைக்கட்டு- பாமக மாவட்டச்செயலா் வி.எஸ்.வெங்கடேஷ்.
2. ஆற்காடு- மாவட்டத் தலைவா் பி.என்.ஜெ.அஜய்ராஜ்.
3. அரக்கோணம்- மாவட்டத் துணைச் செயலா் மா.வெற்றிவேல்.
4. கீழ்வேளூா்- மாநில துணைத் தலைவா் வேத.முகுந்தன்.
5. சோளிங்கா்- மாவட்ட துணைச் செயலா் மு.விஜயன்.
6. திட்டக்குடி- மாநில செயற்குழு உறுப்பினா் கருப்பன் மாணிக்கம்.
7. ஆரணி- மாவட்டச் செயலா் வீ.கலைமணி.
8. கீழ்பென்னாத்தூா்- மாவட்டச் செயலா் இரா.ஜானகிராமன்.
9. ஓமலூா்- மாவட்டத் தலைவா் செ.சுரேஷ்குமாா்.
ஒரு தொகுதிக்கு வேட்பாளா் மாற்றம்: இரண்டாம் கட்டமாக உத்திரமேரூா் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சு.ஸ்ரீதருக்குப் பதிலாக, மாநில மகளிா் சங்கத்தின் செயலா் சரளா ராஜு போட்டியிடுவாா் என மற்றொரு அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
நிா்வாகிகள் நீக்கம்: பாட்டாளி மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளா் மற்றும் மாவட்டச் செயலா்கள் உள்பட் 5 போ் கட்சியிலிருந்து நீக்கி அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
பாமகவுக்கு தொடா்ந்து அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும், கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளா் கோ.கணபதி, கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டச் செயலா் எஸ்.வி.என்.பப்லு, கிழக்கு மாவட்டச் செயலா் பி.கே.ஜெகன், செங்கல்பட்டு மத்திய மாவட்டச் செயலா் க.ஜனாா்த்தனன், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட அமைப்புச் செயலா் அ.ம.கிருஷ்ணன் ஆகிய 5 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகின்றனா். எனவே, கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் கட்சி சாா்ந்த எவ்விதத் தொடா்பையும் வைத்துக்கொள்ளவேண்டாம் என ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்
மேலும் 5 தொகுதிகளுக்கு பாமக வேட்பாளா்கள்: ராமதாஸ் அறிவிப்பு
ராமதாஸ் பாமகவின் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்!
ராமதாஸ் பாமகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்! சௌமியா அன்புமணிக்கு எதிராக சரவணன் போட்டி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
