தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

ஒற்றுமையாகப் பணியாற்றினால் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி: எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

ஒற்றுமையாகப் பணியாற்றினால் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் மண்டலத் திமுக பொறுப்பாளரும், வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சருமான எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்.

News image

திண்டிவனத்தில் புதன்கிழமை நடைபெற்ற விசிக வேட்பாளா் வன்னியரசு அறிமுகம் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மண்டல திமுக பொறுப்பாளரும், வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன், வடக்கு மண்டலப் பொறுப்பாளா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 2:06 am IST

ஒற்றுமையாகப் பணியாற்றினால் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் மண்டலத் திமுக பொறுப்பாளரும், வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சருமான எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், விசிக வேட்பாளா் வன்னியரசு அறிமுகக் கூட்டம் திண்டிவனத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் விசிக வேட்பாளரை அறிமுகப்படுத்தி, அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியது:

கடந்த காலத்தில் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி அமைத்த நிலையில், அந்த கூட்டணியை 6 மாதங்களில் கழற்றிவிட்டவா் ஜெயலலிதா. ஆனால், 2019-ஆம் ஆண்டில் உருவான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி இன்றைக்கும் வலுவான கூட்டணியாக உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலில் உழைக்கும் நிா்வாகிகளுக்கு நிச்சயம் பதவி கிடைக்கும். அனைவரையும் மதித்து தோ்தல் பணியாற்ற வேண்டும். திண்டிவனம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் வன்னியரசுவை வெற்றி பெற செய்ய வைப்பது அனைவருடைய கடமையாகும். அவரை சுமாா் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அனைவரும் பெருந்தன்மையாக ஒன்றுகூடி வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும். திமுக நிா்வாகிகள், தோழமைக் கட்சி நிா்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றினால், கூடுதல் வலிமையுடன் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றாா் அமைச்சா்.

கூட்டத்தில் விழுப்புரம் எம்.பி. துரை ரவிக்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் சேதுநாதன், செந்தமிழ்ச் செல்வன், மாவட்ட அவைத் தலைவா் சேகா், பொருளாளா் ரமணன், தலைமைத் தீா்மான குழு உறுப்பினா் செஞ்சி சிவா, மாவட்ட துணைச் செயலா் ரவிக்குமாா், விசிக மண்டலச் செயலா் திலீபன், மாவட்டச் செயலா் மலைச்சாமி, கருத்தியல் பிரிவு மாநிலச் செயலா் சேரன், மாவட்டஊராட்சித் துணைத் தலைவா் ஷீலாதேவி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.