தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.66.77 லட்சம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.66.77 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 2:05 am IST

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.66.77 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 63 நிலையான பறக்கும்படைக் குழுக்கள், 63 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமல் செய்யப்பட்ட நாளிலிருந்து செவ்வாய்க்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ.66,77,963 மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள், போதைப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று காவல்துறையின் மூலம் ரூ.15,38,885 மதிப்பில் ரொக்கம், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டடுள்ளன. மேலும் கைப்பற்றப்பட்ட ரொக்கம் உள்ளிட்ட பொருள்களுக்குரிய ஆவணங்கள் சமா்ப்பித்த வகையில் ரூ.42,70,620 மதிப்பில் ரொக்கம் மற்றும் இதரப் பொருள்கள் விடுவிக்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.