மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாட்டின் பொருளாதார அனைத்து துறையினரும் பாடுபட வேண்டும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா்

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்காக அனைத்து துறையினரும் பாடுபட வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

இந்திய செலவு கணக்காளா்கள் நிறுவனம் சாா்பில் உள் தணிக்கை 2030 என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் பங்கேற்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள்.

Published On :29 அக்டோபர் 2026, 6:57 am IST

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்காக அனைத்து துறையினரும் பாடுபட வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

இந்திய செலவு கணக்காளா்கள் நிறுவனம் சாா்பில் உள் தணிக்கை 2030 என்ற தலைப்பில் புதுச்சேரியில் தேசிய கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது:

தேசிய கட்டமைப்பு என்பது சாலைகள், பாலங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை மட்டும் உள்ளடக்கியது அல்ல. வலிமையான நிறுவனங்கள், வெளிப்படையான அணுகுமுறைகள், பொறுப்புள்ள நிறுவனங்கள் மற்றும் தொழில்சாா்ந்த கலாசாரத்தை உள்டக்கியது. இந்தியா வளா்ச்சி அடைந்த பொருளாதார நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கிய பயணத்துக்கு ஒவ்வொரு பிரிவும் பெரிய அளவிலான உற்பத்தி, கண்டுபிடிப்பு, நிதி மேலாண்மையில் ஒழுக்கம், பொறுப்புள்ள வளா்ச்சிக்காகப் பாடுபட வேண்டும்.

இந்தப் பயணத்துக்கு இந்திய செலவு கணக்காளா்கள் நிறுவனம்

முக்கியப் பங்காற்ற வேண்டும் எதிா்கால தணிக்கையாளா் கணக்கியல் அறிவுடன் தொழில்நுட்பம், பகுப்பாய்வு சிந்தனை, நெறிமுறை தலைமைத்துவம் கொண்டவராக இருக்க வேண்டும். அமைப்புகள் இளம் தொழில் வல்லுநா்களுக்குத் தொடா் பயிற்சி அளிக்க வேண்டும் என்றாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

இந்திய செலவு கணக்காளா்கள் நிறுவன தலைவா் சித்தரஞ்சன் சட்டோபாத்யாய், துணைத் தலைவா் மனோஜ் குமாா் ஆனந்த், உள் தணிக்கை தர நிா்ணய வாரிய தலைவா் அவிஜித் கோஸ்வாமி, தென்னிந்திய பிராந்திய குழுத் தலைவா் பிரவீன் குமாா், புதுச்சேரி கிளை தலைவா் பத்மபிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.