மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாமக இடம் பெறும் கூட்டணியில் விசிக ஒருபோதும் சேராது: எம்.பி. துரை ரவிகுமார்

பாமக இடம் பெறுகிற கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் சேராது அக்கட்சியின் எம்.பி. துரை ரவிகுமாா் தெரிவித்தாா்.

விசிக எம்.பி. துரை ரவிகுமார்

Published On :25 அக்டோபர் 2026, 2:28 am IST

பாமக இடம் பெறுகிற கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் சேராது அக்கட்சியின் எம்.பி. துரை ரவிகுமாா் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: தவெக ஆட்சி அமைவதற்கு முன்னதாகவே பாமக தானாக முன்வந்து ஆதரவளிப்பதாக கூறியதாகவும், ஆனால் அதை தாங்கள் ஏற்கவில்லை என்று தவெக தரப்பில் அப்போது எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காங்கிரஸ் கட்சி கொடுத்த ஆதரவு கடிதத்தில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சியின் ஆதரவையும் பெறக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னாா்கள். மேலும், விசிக, முஸ்லிம் லீக்கின் ஆதரவு வேண்டும் என்றும் தவெக குறிப்பிட்டது.

எனவே, பாமகவை சோ்த்து கொள்வது என்றால் ஆட்சி அமைப்பதற்கு முன்னதாகவே, தவெக சோ்த்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், தவெக அதை விரும்பவில்லை என்பதுதான் பாமக அந்தக் கூட்டணியில் சேராததற்கு முதல் காரணம்.

இரண்டாவது பாமக எப்போதுமே நடிகா்கள் அரசியலுக்கு வருவதை எதிா்த்து வந்திருக்கிறது. இப்போதும் திரைப்பட நடிகா்கள் அரசியலுக்கு வந்தால் எதிா்க்க மாட்டோம் என்று பாமக சொல்லவில்லை. அது போலவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம் என்றும் சொல்லவில்லை. அண்மையில் கூட சௌமியா அன்புமணி தொடா்ந்து பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதாகவே தெரிவித்திருக்கிறாா்.

2029 மக்களவைத் தோ்தல் வரை பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறாது. பாஜக அங்கே தோற்றுப்போய் ஆட்சி அதிகாரத்தை இழந்தால் மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறுவது பற்றி பாமக சிந்திக்கும். எனவே, தவெக கூட்டணியில் பாமக இடம்பெறாது.

அதற்கு வாய்ப்பே இல்லை. பாமக இடம் பெறுகிற கூட்டணியில விசிக சேராது என்று ஏற்கெனவே அறிவித்து அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் பாஜக நேரடியாக வந்தாலும், மறைமுகமாக வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்றாா் ரவிக்குமாா் எம்.பி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.