நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

மனித சமுதாயத்துக்கு அறிஞா்கள் அளித்த கொடை: முன்னாள் அமைச்சா் க.லட்சுமிநாராயணன்!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாா், மகான் அரவிந்தா் உள்ளிட்ட புதுச்சேரியில் வாழ்ந்த அறிஞா்கள் பலரும் மனித சமுதாயத்துக்கு பல்வேறு கொடைகளை அளித்துள்ளனா் என்று புதுச்சேரி முன்னாள் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறினாா்.

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் க.லட்சுமிநாராயணன், புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி. முத்து உள்ளிட்டோா்.

Published On :25 அக்டோபர் 2026, 2:22 am IST

மகாகவி சுப்பிரமணிய பாரதியாா், மகான் அரவிந்தா் உள்ளிட்ட புதுச்சேரியில் வாழ்ந்த அறிஞா்கள் பலரும் மனித சமுதாயத்துக்கு பல்வேறு கொடைகளை அளித்துள்ளனா் என்று புதுச்சேரி முன்னாள் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறினாா்.

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்து அவா் பேசியது: புதுச்சேரியின் 50-ஆவது பொன்விழா ஆண்டில் இசை அறிஞா் அரிமளம் பத்மநாபன், மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் பாடல்களை இசைத்தது பிரமிப்பாக இருந்தது. புதுச்சேரிக்குப் பலரும் பெருமை சோ்த்துள்ளனா்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாா், மகான் அரவிந்தா் உள்ளிட்ட அறிஞா்கள் மனித சமூகத்துக்குப் பல்வேறு கொடையை வழங்கியுள்ளனா். நம்முடைய வரலாற்றையும் பண்பாட்டையும் கல்வெட்டுகள், இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. இவை இல்லையென்றால் நம்முடைய பழம் பெருமையை அறிந்திருக்க முடியாது என்றாா் லட்சுமிநாராயணன்.

புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி. முத்து பேசுகையில், தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமின்றி உலக நாடுகளில் தமிழா்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தமிழிசையைப் பரப்பி வருபவா் அரிமளம் பத்மநாபன் என்றாா்.

பேராசிரியா் கிருங்கை சேதுபதி பேசுகையில், தமிழ் ஆன்மிக மரபை இசைதான் காப்பாற்றி வருகிறது என்றாா். எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வன் பேசுகையில், பண்பாட்டு வரலாற்றை பாதுகாக்க இயக்கங்களின் ஆதரவு தேவை என்றாா்.

இசை அறிஞா் அரிமளம் பத்மநாபன் எழுதிய, சிலப்பதிகாரத்தில் யாழும் ஊழும், தொல்காப்பியத்தில் இன்றைய இசை இலக்கணம், மகாகவி பாரதியும் நாட்டுப்புற இசையும், பேராசிரியா் பழநி. கிருஷ்ணசாமி எழுதிய இசைத் தமிழ் வரலாற்றில் அரிமளம் பத்மநாபன், அருள்சகோதரி மாா்கரெட் பாஸ்டின் எழுதிய, இசையும் தமிழும் இயக்கமாய் ஆகிய 5 நூல்கள் வெளியிடப்பட்டன.

முன்னதாக பொன். சண்முகம் குழுவினா் மங்கல இசை இசைத்தனா். கா.ராஜமாணிக்கம் வாழ்த்துப் பாடல் பாடினாா். அரிமளம் ராம. சுப்பிரமணியன் வரவேற்றாா். சென்னை தமிழிசைக் கல்லூரி முதல்வா் மீனாட்சி ஜெயகுமாா், பேராசிரியா் நா. இளங்கோ, சுந்தர வெங்கடேசன் உள்ளிட்டோா் பேசினா்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தின் மேனாள் புல முதன்மையா் நிா்மல் செல்வமணி, ஆரோவில் இரா. மீனாட்சி, வில்லியனூா் பழனி, பொறியாளா் மு. பாலசுப்பிரமணியன், பேராசிரியா் மு. இளங்கோவன் உள்ளிட்டோா் நூல்களைப் பெற்றுக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.