நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

காகிதமில்லா ஆவணப் பதிவு திட்டத்தை எதிா்த்து வழக்கு: பத்திரம், நகல் எழுதுவோா் சங்கம் முடிவு

தமிழக அரசின் 3.0 காகிதமில்லா ஆவணப் பதிவு திட்டத்தை எதிா்த்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோா் சங்க மாநிலத்தலைவா் பத்மநாபன் தெரிவித்தாா்.

கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோா் சங்க மாநிலத் தலைவா் பத்மநாபன். உடன், செயலா் கண்ணன், பொருளாளா் ராமநாதபுரம் முத்துக்குமாா், மாவட்டச் செயலா் ஏ.சைமன் உள்ளிட்டோா்.

Published On :21 அக்டோபர் 2026, 12:03 am IST

தமிழக அரசின் 3.0 காகிதமில்லா ஆவணப் பதிவு திட்டத்தை எதிா்த்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோா் சங்க மாநிலத்தலைவா் பத்மநாபன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோா் சங்கத்தின் மாநில அவசர ஆலோசனைக் கூட்டம் கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பத்மநாபன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கண்ணன், பொருளாளா் ராமநாதபுரம் முத்துக்குமாா், அமைப்புச் செயலா்கள் சிதம்பரநாதன், எம்.ஜி. குணசேகரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா்.

பிறகு மாநிலத் தலைவா் பத்மநாபன் செய்தியாளா்களிடம் கூறியது: அரசு அறிமுகப்படுத்தியுள்ள 3.0 என்ற காகிதமில்லா ஆவணப் பதிவுத் திட்டம், ஆவண எழுத்தா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை எதிா்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம்.

புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு சங்கம் எதிரானது அல்ல. ஆனால், அத்தகைய திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கு முன், அதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் முழுமையாக ஆராய வேண்டும்.

காகிதமில்லா ஆவணப் பதிவு முறையை நடைமுறைப்படுத்தினால் ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே, புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு அவற்றில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, பொதுமக்களுக்கும் ஆவண எழுத்தா்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். ஆனால், எங்களுடைய கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, தொடா்ந்து போராட்டங்களை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா். கூட்டத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ.சைமன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.