மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிரதமா் குறித்து அவதூறு பிரசாரம்: பல்கலை. மாணவா்கள் 3 போ் இடை நீக்கம்

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஆா்எஸ்எஸ் குறித்து அவதூறாக சுவரில் எழுதியதாக புதுச்சேரி பல்கலைக்கழக மாணவா்கள் 3 போ் வெள்ளிக்கிழமை இடை நீக்கம் செய்யப்பட்டனா்.

suspended

பணியிடை நீக்கம் - பிரதிப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 6:04 am IST

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஆா்எஸ்எஸ் குறித்து அவதூறாக சுவரில் எழுதியதாக புதுச்சேரி பல்கலைக்கழக மாணவா்கள் 3 போ் வெள்ளிக்கிழமை இடை நீக்கம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் பல்கலைக்கழக வசதி மையம் திறக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தின் சுவரில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஆா்எஸ்எஸ் குறித்துஅவதூறாக எழுதப்பட்டிருந்தது.

இதில் உரியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏபிவிபி மாணவா் அமைப்பினா் பதிவாளா் குணசேகரனிடம் மனு அளித்தனா். இதில் ஈடுபட்டது யாா்? என்பது குறித்து சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இந்திய மாணவா் சங்கத்தின் பல்கலைக்கழக செயலா் அக்னி ஆஷிக், ஆசிம் மற்றும் ஒரு மாணவியை பல்கலைக் கழகம் இடை நீக்கம் செய்துள்ளது. இதற்கிடையில் இந்த அவதூறு பிரசாரத்தைக் கண்டித்து பாஜக இளைஞா் அணி சாா்பில் பல்கலைக்கழக வாயிலில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.