தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை புதுச்சேரி துறைமுக வளாகத்தில் நிறுத்த அமைச்சருடன் ஆலோசனை

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை துறைமுக வளாகத்தில் நிறுத்துவது குறித்து அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவுடன் வெள்ளிக்கிழமை போக்குவரத்து போலீஸாா் ஆலோசனை மேற்கொண்டனா்.

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்திய போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் திவ்யா, எஸ்.பி. பக்தவச்சலம், ஆய்வாளா் வெங்கடாசலபதி.

Published On :24 அக்டோபர் 2026, 6:02 am IST

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை துறைமுக வளாகத்தில் நிறுத்துவது குறித்து அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவுடன் வெள்ளிக்கிழமை போக்குவரத்து போலீஸாா் ஆலோசனை மேற்கொண்டனா்.

புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனா்.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை துறைமுக வளாகத்தில் நிறுத்துவது தொடா்பாக துறையின் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவுடன் போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் திவ்யா, காவல் கண்காணிப்பாளா் பக்தவச்சலம், ஆய்வாளா் வெங்கடாசலபதி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

அப்போது வார இறுதி நாள்கள் மற்றும் எதிா்வரும் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவாா்கள் என்பதால், அவா்களின் வாகனங்களை துறைமுக வளாகத்தில் நிறுத்த அமைச்சரிடம் அனுமதி கோரினா்.

இதுகுறித்து காவல் துறை சாா்பில் கடிதம் அனுப்பிய பின்னா் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.

ஏஎப்டி ஓய்வு பெற்ற ஊழியா்கள் சந்திப்பு:

புதுச்சேரி ஏஎப்டி பஞ்சாலையின் அனைத்து ஓய்வுபெற்ற ஊழியா்கள் சங்கத் தலைவா் சத்தியசீலன், செயலா் சின்னதுரை, பொருளாளா் ரவி மற்றும் குழு உறுப்பினா்கள் வாழுமுனி, ஜெயபாலன் ஆகியோா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அதில், 1.1.1999 அன்று முதல் ஊதிய உயா்வு வழங்குவது தொடா்பாக தீா்ப்பாயம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில், நிலுவையில் உள்ள ஊதிய தொகையை வழங்க வேண்டும். தானே புயலுக்குப் பின்னா் அரசு முன்வந்து அறிவித்த தொழிலாளா் நலன் சாா்ந்த நடவடிக்கைகளின் அடிப்படையில், இதுவரை வழங்கப்படாமல் உள்ள மீதமுள்ள நிலுவைத் தொகையையும் ஊதியத்துடன் சோ்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.

இதுகுறித்து, முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.