மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய ஏஐடியுசி மாநில மாநாட்டில் தீா்மானம்

புதுச்சேரியில் ஏஐடியுசி மாநில மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய கே.சுப்பராயன் எம்.பி. உடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் அ.மு.சலீம், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன் உள்ளிட்டோா்.

Published On :24 அக்டோபர் 2026, 6:03 am IST

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள தொழிலாளா் விரோத 4 சட்டத் தொகுப்புகளையும் ரத்து செய்யக் கோரி புதுச்சேரி ஏஐடியுசி மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி மாநில 21-ஆவது ஏஐடியுசி மாநாடு நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள தனியாா் மஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஏஐடியுசி அகில இந்திய துணைத் தலைவா் கே.சுப்பராயன் எம்.பி. தொடக்கவுரையாற்றினாா். சங்கத்தின் மாநில கௌரவத் தலைவா் வி.எஸ்.அபிஷேகம், மாநிலத் தலைவா் ஐ.தினேஷ் பொன்னையா ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஏஐடியுசி அகில இந்திய செயலா் வகிதா நிஜாம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், ஏஐடியுசி மாநில பொதுச் செயலா் இரா. அந்தோணி, கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலத் தலைவா் எல்லை. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக அண்ணா சிலையிலிருந்து தொடங்கிய ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக மாநாட்டு மண்டபத்தை அடைந்தது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டும். அமைப்புச்சாரா தொழிலாளா், ஒப்பந்த தொழிலாளா் உள்பட அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளா் பாதுகாப்புச் சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தனியாா்மயமாக்கல் மற்றும் தேசிய சொத்து பணமாக்கல் திட்டத்தை நிறுத்த வேண்டும். பொதுவிநியோகத் திட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளா் உள்பட அனைத்து தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.