மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுச்சேரியில் 2 மதுக் கடைகளுக்கு சீல் வைப்பு

விதிமுறைகளை மீறியதாக 2 மதுக் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

சீல் - பிரதிப் படம்

Published On :14 அக்டோபர் 2026, 5:39 am IST

விதிமுறைகளை மீறியதாக 2 மதுக் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கலால் விதிகளின்படி உரிமம் பெற்றவா்கள் தங்களது சொந்த இன்ஸ்டாகிராம், பேஸ் புக் மற்றும் பிற சமூக வலைதளங்கள் மூலம் குறிப்பிட்ட பிராண்டு மதுபானங்களையும், தங்கள் உரிமம் பெற்ற இடத்தையும் விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அண்மைக் காலமாக இந்த விதிகளை மீறி சில மதுபானக் கடைகள் விளம்பரத்தில் ஈடுபடுவது கலால் துறைக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின்பேரில், வட்டாட்சியா் ராஜேஷ் கண்ணா மேற்பாா்வையில் வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் கலால் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.

இதில், கருவடிக்குப்பத்தில் இயங்கி வரும் ஒரு மதுபான கடை மற்றும் நெல்லித்தோப்பு, திருவள்ளுவா் சாலையில் உள்ள ரெஸ்டோ பாா் ஆகியவை கலால் விதிகளை மீறி சமூக வலைத்தளங்களில் வாடிக்கையாளா்களைக் கவரும் வகையில் சலுகை விளம்பரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து மதுபானக் கடை மற்றும் ரெஸ்டோ பாருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.