மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (அக்.9) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருவது தொடர்பாக...

Vote counting

புதுச்சேரி லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது - கோப்புப்படம்

Published On :9 அக்டோபர் 2026, 9:45 am IST

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (அக்.9) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வா் என்.ரங்கசாமி இரண்டிலும் வெற்றி பெற்றாா்.

இதில், தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா அவா் செய்ததால், இந்த தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சாா்பில் 6 பேரும், சுயேச்சைகள் 5 பேரும் ஆக மொத்தம் 11 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களில், என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் ஆ.அசோக் ஆனந்த், திமுக வேட்பாளா் கு.சேதுசெல்வம், காங்கிரஸ் வேட்பாளா் இ.விநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் அ.மு.சலீம் ஆகியோா் இடையே 4 முனைப் போட்டி நிலவியது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் 80.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலைக் காட்டிலும் 6.39 சதவீதம் வாக்குகள் குறைவாகும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான குலோத்துங்கன் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமில் இருந்து வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மேஜைகளில் வைக்கப்பட்டது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

பதிவான தபால் வாக்குகள் விவரம்:

மொத்த தபால் வாக்குகள்: 112

வீடுகளுக்கு சென்ற பெற்றவை: 104

தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் பதிவானவை-5

சர்வீஸ் வாக்கு: 3

தட்டாஞ்சாவடி தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கை முடிவு:

அசோக் ஆனந்த் (என்.ஆர் காங்கிரஸ்) - 65

விநாயகம் (காங்கிரஸ்) - 26

சேது செல்வம் (திமுக) - 10

சலீம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) -3

கார்த்திக் குமாரி (நாம் தமிழர் கட்சி) -1

செல்லாதவை - 8

தொடர்ந்து தற்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றது.

8 மேஜைகள் அமைக்கப்பட்டு 4 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளர் ஆ. அசோக் ஆனந்த் முன்னிலை வகித்து வருகிறார்.

Vote counting for the Thattanchavady by-election has begun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.