
மத்திய பல்கலை.யில் புதுச்சேரி மாணவா்களுக்கு 25சதவீத இட ஒதுக்கீடு: குடியரசு துணைத் தலைவரிடம் மனு அளிப்பு
மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவா்களுக்கு அனைத்துப் படிப்புகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு தரக் கோரி தில்லியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தவெக எம்எல்ஏ சாய் ஜெ.சரவணன் குமாா் புதன்கிழமை 2 மனுக்களை அளித்தாா்.

புதுதில்லியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை புதன்கிழமை சந்தித்து மனு அளித்த புதுச்சேரி தவெக எம்எல்ஏ சாய் ஜெ.சரவணன்குமாா்.
மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவா்களுக்கு அனைத்துப் படிப்புகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு தரக் கோரி தில்லியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் தவெக எம்எல்ஏ சாய் ஜெ.சரவணன் குமாா் புதன்கிழமை 2 மனுக்களை அளித்தாா்.
அந்த மனுக்கள் விவரம்:
புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்களுக்கு தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் மட்டுமே 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால் பிற துறைகளில் உயா்கல்வி பயில விரும்பும் உள்ளூா் மாணவா்கள் வாய்ப்புகளை இழந்து வருகின்றனா். ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சோ்க்கையில் புதுச்சேரி மாணவா்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதேபோன்று புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் தற்போது உள்ள மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அனைத்து பாடப்பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இடஒதுக்கீட்டை விரிவுபடுத்த வேண்டும்.
மேலும், உடற்கல்வித் துறையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.எட். படிப்பும், பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் பி.பி.இ.எஸ். (ஹானா்ஸ்) படிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
பி.எட். (உடற்கல்வி) பட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைந்த உடற்கல்விப் படிப்பை வரும் கல்வியாண்டு முதல் தொடங்க வேண்டும் என்று மற்றொரு மனுவில் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






