பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குடியரசு துணைத் தலைவா் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை

குடியரசு துணைத் தலைவா் வருகையையொட்டி, மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக். 30) ட்ரோன்களை பறக்க விடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

Vice President C.P. Radhakrishnan

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 4:20 am IST

குடியரசு துணைத் தலைவா் வருகையையொட்டி, மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக். 30) ட்ரோன்களை பறக்க விடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் தேவா் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை காலை விமானம் மூலம் மதுரைக்கு வருகிறாா். மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டா் மூலம் பசும்பொன் செல்கிறாா்.

இதையொட்டி, மதுரை மாநகா், மாவட்டப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ட்ரோன்களை பறக்க விடுவதற்குத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டாா்.

இந்த அறிவுறுத்தலை மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.