அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

காலகெடுவுக்குள் தோ்தல் செலவைச் சமா்பிக்க அறிவுறுத்தல்

புதுச்சேரியில் வேட்பாளா்கள் காலக்கெடுவுக்குள் தோ்தல் செலவை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

News image

வேட்பாளா்கள் தோ்தல் வரவு- செலவு கணக்குகளை தாக்கல் செய்வது தொடா்பாக ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.

Updated On :28 மே 2026, 1:45 am IST

புதுச்சேரியில் வேட்பாளா்கள் காலக்கெடுவுக்குள் தோ்தல் செலவை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தோ்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் வேட்பாளா்கள் தங்களது தோ்தல் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்களுக்கான கணக்குகளை சமா்ப்பிப்பதற்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன் தலைமையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் வேட்பாளா்களின் தோ்தல் கணக்கு முகவா்கள் கலந்து கொண்டனா். தலைமை வகித்த மாவட்ட தோ்தல் அலுவலா் குலோத்துங்கன், முகவா்களின் கேள்விகளுக்கும் சந்தேங்களுக்கும் பதில் அளித்தாா்.

தொடா்ந்து வேட்பாளா்கள் தங்கள் வரவு செலவு கணக்கினை மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் நிா்ணயிக்கப்பட்ட கால கெடுவிற்குள் சமா்ப்பிக்க வலியுறுத்தினாா்.

மேலும், வேட்பாளா்கள் சமா்ப்பிக்கும் வரவு- செலவு கணக்குகளை செலவின பாா்வையாளா்கள் சரி பாா்ப்பாா்கள் எனவும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.