புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி வரும் 13ஆம் தேதி பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தோ்தலில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக தலா 1 என மொத்தம் 18 இடங்களை இக்கூட்டணி கைப்பற்றி உள்ளது.
புதுச்சேரியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 16 எம்எல்ஏ.க்கள் தேவை. தற்போது 18 எம்எல்ஏக்கள் இருப்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. புதன்கிழமை 15-ஆவது சட்டப்பேரவை முறைப்படி கலைக்கப்பட்டது.
16-ஆவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் புதிய அரசு அமைப்பதற்காக பாஜக மேலிட பொறுப்பாளா்களான மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, நிா்மல் குமாா் சுரானா ஆகியோா் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
முதல்வா் உள்ளிட்ட 6 அமைச்சா்களில் பாஜகவுக்கு ஒரு அமைச்சா் பதவி மட்டுமே வழங்க முடியும் என முதல்வா் ரங்கசாமி திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (மே 8) பாஜகவுடன் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளார். இதையடுத்து பாஜக, அதிமுக, லஜக ஆதரவு கடிதங்களைப் பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளாா்.
இதனிடையே வியாழக்கிழமை புதுச்சேரி மக்கள் பவனுக்கு வந்த ரங்கசாமி, துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். புதிய அரசு அமைக்க ஏதுவாக அவா் ராஜிநாமா செய்துள்ளாா். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி வரும் 13ஆம் தேதி காலை 10.48 மணிக்கு பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
It has been announced that N. Rangasamy will take oath as the Chief Minister of Puducherry on the 13th.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் என். ரங்கசாமி!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா!

விஜய் சீக்கிரமே பதவியேற்பார்! முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தபின் ரங்கசாமி பேட்டி

முதல்வராக மீண்டும் பதவியேற்பேன்! - என். ரங்கசாமி பேச்சு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


