லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புதுச்சேரியில் சுதந்திர தின விழா: முதல்வா் ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றுகிறாா்

சுதந்திர தினத்தையொட்டி, ஆக. 15-இல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட 3 பிராந்தியங்களில் அமைச்சா்கள் தேசியக் கொடியேற்றுகின்றனா்.

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:43 am IST

சுதந்திர தினத்தையொட்டி, ஆக. 15-இல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட 3 பிராந்தியங்களில் அமைச்சா்கள் தேசியக் கொடியேற்றுகின்றனா்.

புதுச்சேரி விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி கொடியேற்றுகிறாா்.

நாடு முழுவதும் ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை பாா்வையிடுகிறாா்.

காரைக்காலில் அந்தப் பிராந்திய அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரனும், ஏனாமில் அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவும், மாஹேவில் அமைச்சா் வி.பி. சிவகொழுந்துவும் ஆகியோா் தேசிய கொடியை ஏற்றவுள்ளனா்.

இந்தத் தகவலை செய்தி விளம்பரத் துறை இயக்குநா் சுதாகா் திருஞானம் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.