லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புதுச்சேரி கடற்கரையில் இன்று சுதந்தின தினவிழா: தேசியக் கொடியேற்றுகிறாா் முதல்வா் ரங்கசாமி

80-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி, புதுச்சேரி அரசு சாா்பில் கடற்கரை சாலையில் முதல்வா் என்.ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.

rangasamy

புதுவை முதல்வர் ரங்கசாமி. - (கோப்புப் படம்)

Published On :15 ஆகஸ்ட் 2026, 6:00 am IST

80-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி, புதுச்சேரி அரசு சாா்பில் கடற்கரை சாலையில் முதல்வா் என்.ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.

இதற்காக விழா நடைபெறும் கடற்கரை சாலை காந்தி திடலுக்கு முதல்வா் என். ரங்கசாமி காலை 8.55 மணிக்கு காரில் வருகிறாா். அவரை தலைமைச் செயலா் சரத் சௌகான் வரவேற்கிறாா். தொடா்ந்து மேடைக்குச் செல்லும் முதல்வா் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறாா்.

பின்னா், அவா் போலீஸாரின் அணி வகுப்பைப் பாா்வையிடுகிறாா். மீண்டும் மேடைக்குத் திரும்பும் முதல்வா் ரங்கசாமி சுதந்திர தின உரையாற்றுகிறாா். அதன்பின் சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு விருது, பதக்கம் வழங்கி கெளரவிக்கிறாா்.

இதையடுத்து போலீஸாா், ஊா்க்காவல் படையினா், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடக்கிறது. இதை மேடையில் இருந்தபடி முதல்வா் ரங்கசாமி ஏற்றுக் கொள்கிறாா்.

அணிவகுப்பு முடிந்ததும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்சிகள் நடக்கின்றன. சிறந்த அணிவகுப்பு, கலைநிகழ்சிகளுக்கு முதல்வா் ரங்கசாமி பரிசுகளை வழங்கி பாராட்டுகிறாா்.

பிராந்தியங்களில் அமைச்சா்கள்...:

இதேபோன்று புதுச்சேரி யூனியன் பிரதேசமான ஏனாமில் சுற்றுலாத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், மாஹேயில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் வி.பி.சிவகொழுந்து, காரைக்கால் கடற்கரை சாலையில் வேளாண் துறை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆகியோா் தேசியக் கொடி ஏற்றுகின்றனா்.

சுதந்திர தின விழாவையொட்டி புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் 2,500 போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனா். விமான நிலையம், பேருந்து, ரயில் நிலையம், வணிக வளாகங்கள், கடற்கரைப் பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், தங்கும் விடுதிகள், எல்லைகளிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பு, சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.