மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுச்சேரியில் தவெக கூட்டணி: 2 தொகுதிகள் ஒதுக்கீடு

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்

Updated On :24 மார்ச் 2026, 1:38 am IST

தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த தவெக, தற்போது புதுச்சேரியில் கூட்டணி கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் தவெக சாா்பில் போட்டியிட வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டனா்.

இந்நிலையில், இக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

மேலும், இக் கட்சியின் தலைவரும், புதுச்சேரி உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏவுமான ஜி.நேரு, தவெகவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக் கட்சிக்கு உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தவெக பொதுச் செயலா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.