மேட்டுப்பாளையத்தில் 38 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
அவ்வைநகா் நலவாழ்வு சங்கத்தின் 40-ஆவது ஆண்டு விழா மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழா சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
இதில் புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிசிடிவி கேமராக்களைத் தொடங்கி வைத்தும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கியும் பேசியதாவது:
2011-ஆம் ஆண்டு என்.ஆா்.காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது முதல் 2 தொகுதிகளில் நான் போட்டியிடுவது வழக்கம். இந்த முறை மங்கலம், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டேன். தட்டாஞ்சாவடி தொகுதியைப் பாா்த்துக் கொள்ள அசோக் ஆனந்து உள்ளாா்.
மங்கலம் தொகுதி மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அந்த தொகுதியை வைத்துக் கொண்டு, தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜிநாமா செய்தேன். வரும் தோ்தலில் மீண்டும் என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
யாா் யாரோ, வருவாா்கள், என்னவெல்லாமோ சொல்வாா்கள். அதைப் பொருள்படுத்த வேண்டாம். புதுச்சேரி மாநிலம் வளா்ச்சியடைந்து வருகிறது. யூனியன் பிரதேசம் என்பதால் கொஞ்சம் சிரமம் உள்ளது. மக்கள் என்ன நினைக்கிறாா்களோ அதை செய்து கொடுத்து வருகிறோம்.
காங்கிரஸ் ஆட்சியில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு தரவில்லை. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். ஏற்கெனவே அறிவித்த அட்டவணைப்படி தோ்வுகள் நடைபெறும்.
கரசூா் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டு புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு, படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
மேட்டுப்பாளையம் பகுதியில் 38 ஏக்கா் பரப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் புதுச்சேரி அரசு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது என்றாா் முதல்வா் ரங்கசாமி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழக முதல்வா் விஜய்க்கு புதுச்சேரி முதல்வா் வாழ்த்து

புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி தொடர அரசு நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி உறுதி

தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் முதல்வா் ரங்கசாமி மீது கோபம்! வெ. வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு!
தவெக தலைவா் விஜய் சிறப்பாக பணியாற்ற புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வாழ்த்து
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

