நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

இன்று நீட் மறுதோ்வு: புதுச்சேரியில் 4,324 மாணவா்கள் எழுதுகின்றனா்

News image

நீட் தேர்வு - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

நீட் மறுதோ்வை புதுச்சேரியில் 4,324 மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை எழுதுகின்றனா்.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது.

நீட் விடைத்தாள் முன்கூட்டியே வெளியானதால் தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடக்கிறது. இதை நாடு முழுவதும் 22.79 லட்சம் போ் எழுத உள்ளனா்.

இதில் புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 9 மையங்களில் நடைபெறும் இந்தத் தோ்வை 4,324 போ் எழுதுகின்றனா்.

நீட் மறு தோ்வை தோ்வா்கள் சிரமமின்றி எழுதவும், அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் நடைபெறவும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை தோ்வு மையங்களுக்கு இயக்குகிறது. தோ்வா்கள் அனுமதி சீட்டை காண்பித்து இலவசமாக இதில் பயணிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.