மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!

புதுச்சேரியில் அமைச்சரவை விரிவாக்கத்தில் மூன்று எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டதைப் பற்றி...

News image

புதுச்சேரியில் மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு.

Updated On :17 ஜூன் 2026, 9:44 am IST

புதுச்சேரியில் அமைச்சரவை விரிவாக்கத்தில் மூன்று எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆர். காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

கூட்டணியின் சார்பில் என். ரங்கசாமி மீண்டும் முதல்வராக கடந்த மே 13 -ஆம் தேதி பதவியேற்றார். அவருடன், அமைச்சர்களாக பாஜகவை சோ்ந்த ஆ. நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரஸைச் சோ்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

Story image

இதைத் தொடர்ந்து மே 18 -ல் தற்காலிக பேரவைத் தலைவராக ஆ. அன்பழகனும், மே 20-ல் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் சட்டப்பேரவையில் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதன்பின்னர், ஜூன் 3 -ஆம் தேதி என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த பெ.ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து, பாஜகவை சேர்ந்த ஜி.என்.எஸ். ராஜசேகர் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம், முதல்வர் ரங்கசாமி பரிந்துரைத்தார்.

இதனைத்தொடர்ந்து புதிய அமைச்சர்களாக 3 பேரை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் இன்று (ஜூன் 17) காலை பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், பெ. ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து, ஜி.என்.எஸ். ராஜசேகர் ஆகிய மூவரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே பதவியேற்ற 2 அமைச்சர்களுக்கு இதுவரை துறைகள் ஒதுக்கப்படாத நிலையில், 5 அமைச்சர்களுக்கும் இன்று துறைகள் ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்கள் துறை ஒதுக்கீடு எப்போது?

புதுச்சேரி அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, “அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது. மிக்க மகிழ்ச்சி.

இந்த அமைச்சரவை முழுமையாக நல்ல முறையில் செயல்பட்டு மக்களின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபடும். விரைவில் அமைச்சர்களுக்கான விழாக்கள் ஒதுக்கி கொடுக்கப்படும்.

விரைவில் பேரவைத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்படும். இந்தப் பதவி பாஜகவுக்கா? என் ஆர் காங்கிரஸுக்கா? என்பது கொடுக்கும் போது தெரிய வரும்” என்றார்.

Summary

Three MLAs were sworn in as ministers during the cabinet expansion in Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.