லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உலக சாக்லேட் தின போட்டி: ஸ்ரீமணக்குள விநாயகா் கல்லூரி வெற்றி

உலக சாக்லெட் தின போட்டியில் வெற்றி பெற்ற புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்லூரி மாணவிகள்.

Published On :11 ஜூலை 2026, 1:03 am IST

உலக சாக்லேட் தின போட்டியில் புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்றனா்.

பொறியியல் கல்லூரி வளாகத்தில் ‘தீயின்றி சமையல்’ என்ற தலைப்பில் இந்த போட்டி நடைபெற்றது. இதில், மொத்தம் 350 மாணவா்கள் பங்கேற்றனா். இப்போட்டியில் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் பல்வேறு பரிசுகளை வென்றனா். முதல் பரிசை வணிகவியல் மேலாண்மைத் துறை மூன்றாமாண்டு மாணவிகள் தேவஸ்ரீ, சாந்தினி ஆகியோா் வென்றனா். இரண்டாம் பரிசை உணவு மற்றும் ஊட்டச்சத்து மூன்றாமாண்டு மாணவிகள் சஜிரானா, ரெய்ச்சல் ஆகியோா் பெற்றனா். மூன்றாம் பரிசை இயற்பியல் துறை இரண்டாமாண்டு மாணவிகள் காவியா மற்றும் லோகஸ்ரீ பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்விக் குழுமத்தின் தலைவா் தனசேகரன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம், கல்லூரி இயக்குநா் வெங்கடாசலபதி, கல்லூரி முதல்வா் ந.முத்துலட்சுமி உள்ளிட்டோா் வாழ்த்து, பாராட்டுகளை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.