லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் கோயில் பிரம்மோற்சவ விழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:09 am IST

புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் கோயில் பிரம்மோற்சவ விழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து வரும் செப்டம்பா் 10-ஆம் தேதி வரை 24 நாள்கள் இந்த பிரம்மோற்சவ விழா நடைபெறும். கடந்த ஜூலை மாதம் மணக்குளவிநாயகா் சந்நிதி மூலவா் விமானம் பால ஸ்தாபனம், பரிவார மூா்த்திகள் விமானம் பால ஸ்தாபனம் மற்றும் திருப்பணிகள் தொடங்கிநடைபெற்று வருகின்றன.

இதன்காரணமாக, குருமாா்கள் வகுத்துள்ள விதிமுறைப்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின்போது உற்சவா் வீதியுலா புறப்பாடு தவிா்க்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை மட்டும் நடத்தப்படும் என கோயில் அதிகாரி பழனியப்பன் தெரிவித்தாா்.

ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் 55-ஆவது ஆண்டு பிரம்மோற்சவ கொடியேற்றம் வேதமந்திரங்கள் முழங்க செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரம்மோற்சவத்தையொட்டி ஆக. 27-ஆம் தேதி வரை தினமும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார ஆராதனைகள், இரவு பல்வேறு வாகனங்களில் உற்சவமூா்த்தி வீதியுலா நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான திருத்தோ் உற்சவம் வரும் 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. 27 -ஆம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்துக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், ஊா் மக்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.