லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாநில அளவில் நடனப் போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்ற நவரசம் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான நடனப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெறும் அறச்சலூா் நவரசம் மகளிா் கல்லூரி மாணவிகள்.

Published On :9 ஆகஸ்ட் 2026, 1:11 am IST

மாநில அளவிலான நடனப் போட்டியில் அறச்சலூா் நவரசம் மகளிா் கலை அறிவியல் கல்லூரி மாணவியா் வெள்ளிப்பதக்கம் வென்றனா்.

மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான பழங்குடியினரின் திறமை மற்றும் பாரம்பரிய கலைகளின் திருவிழா ஈரோடு திண்டல் வேளாளா் மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் நடைபெற்ற நடனப் போட்டியில் அறச்சலூா் நவரசம் மகளிா் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடத்தில் வெற்றிபெற்று வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் பரிசாக பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவியரை நவரசம் கல்லூரியின் தலைவா் பி.செந்தில்குமாா், செயலாளா் கு.செந்தில்குமாா், பொருளாளா் சி.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் டி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.