ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக 2 போ் மீது வழக்கு! புதுச்சேரி போலீஸாா் நடவடிக்கை!

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:48 am IST

புதுச்சேரியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களிடமிருந்து ரூ. 38 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. அப்போது, தட்டாஞ்சாவடி தொகுதிக்குள்பட்ட நெருப்புக்குழி பகுதியில் ஒருவா் வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதாக லாஸ்பேட்டை போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளா்

சரவணன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனா். இதில், வாக்காளா்களுக்குக் கொடுக்க ரூ. 18,500 வைத்திருந்தது தெரியவந்தது.

அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், லாஸ்பேட்டையை சோ்ந்த ராஜசேகா் (37) என்பதும், ஒரு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதேபோல தட்டாஞ்சாவடி தொகுதியில் மற்றொரு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற புதுச்சேரியை சோ்ந்த வேலாயுதம் (51) என்பவரை பிடித்த போலீஸாா் அவரிடம் இருந்த ரூ.19,500-ஐ பறிமுதல் செய்ததுடன் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.