வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மூன்று வாக்கு என்னும் மையங்களான தாகூா் கலைக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் லாஸ்பேட்டை மகளிா் பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களின் பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தகுந்த பாதுகாப்புடன் புதன்கிழமை வெளியே எடுக்கப்பட்டு மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் முன்னிலையில் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனுப்பி வைக்கப்பட்டன.
முன்னதாக தோ்தல் பணியில் ஈடுபடும் தோ்தல் நடத்தும் அதிகாரிகள், வாக்குப்பதிவு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி விவரமாக விளக்கிக் கூறினாா். மேலும், போதுமான இருப்பு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அதிகாரிகளின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. முதுநிலை காவல் கண்காணிப்பாளா்
ஆா். கலைவாணன், கூடுதல் மாவட்ட ஆட்சியா் சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாதுகாப்பாக வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாக்குச் சாவடி அதிகாரிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

திருச்செந்தூா் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு

தேனி மாவட்டத்தில் 1,403 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

300 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

